● ஜி.வி.எஸ். ராவணன், திருச்சி-2.
என் நண்பர் மகள் பானுமதிக்கு 25 வயது. பி.ஈ., முடித்து 25,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இன்னும் திருமணமாக வில்லை. இடதுகால் ஊனம். திருமணம் எப்போது நடக்கும்?
ஔவையார் பாடிய பாடல்- "அரிது அரிது மானிடராய்ப் பிறப்பதரிது. அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறப்பதரிது' என்று உண்டு. இருந்தாலும், பானுமதி பிறப்பதற்கு முன்பே அவருக்கென்று ஒரு வரன் (மாப்பிள்ளை) பிறந்திருப்பார். அதற்குரிய காலம், நேரம் வரும்போது அந்த மாப்பிள்ளை கண்ணுக்குத் தெரிவார். உத்திர நட்சத்திரம், கன்னி ராசி, தனுசு லக்னம். லக்னாதிபதி குரு 9-ல் திரிகோணம் பெற்று லக்னத்தைப் பார்ப்பதால் நிச்சயம் திருமணமாகும். வாரிசும் பிறக்கும். லக்னத்தில் ராகுவும், 7-ல் கேதுவும், 2-ல் சனியும் இருப்பது தோஷம். 2010 முதல் ராகு தசை. இதில் கேது புக்தி- 2019 செப்டம்பர் வரை. அதன் பிறகு சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். அன்பான கணவரும், ஆனந்தமான வாழ்க்கையும் அமைய வேண்டும். அதற்காக சூலினி துர்க்கா ஹோமமும், காமோ கர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் (இவை பிரதானம்- இத்துடன் வேறு பல ஹோமம் உள்பட 19 வகையானவை) செய்து பானுமதிக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். புது ஆடை உடுத்தி அபிஷே கத்துக்குப் பிறகு ஈர உடைகளை தானம் செய்துவிட்டு மாற்று உடை அணியலாம். தொடர்புக்கு: சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067. காரைக்குடி போக்குவரத்து நகர், திருச்சி பைபாஸ் ரோடு.
● சிவமாணிக்கம், எஸ்.வி. மில் போஸ்ட்.
நான் இதே தொழிலில் நிரந்தரமாக இருப்பேனா? என் மனைவிக்கு அரசு வேலை கிடைக்குமா? எங்களுக்கு எப்போது குழந்தை கிடைக்கும்? தாங்கள் சொல்லியபடி சேங்காலிபுரம், கல்கருடனுக்குப் பரிகார பூஜை செய்து விட்டோம்.
சிவமாணிக்கம் கன்னியா லக்னம், கன்னியா ராசி, சித்திரை நட்சத்திரம். குரு தசை, சுக்கிர புக்தி. குரு 5-ல் நீசம்! வேறு வேலை முயற்சி களைச் செய்ய வேண்டாம். நல்லதோ கெட்டதோ, சம்பளம் கூடுதலோ குறைவோ- பார்க்கும் வேலையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். மூன்றாவது தசையாக நீச கிரக தசை நல்லது செய்யாது. அடுத்துவரும் 4-ஆவது தசையும் சனி தசை; ஆகாது. பறப் பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிட வேண்டாம். மனைவி காயத்ரிக்கு அவிட்ட நட்சத்திரம், மகர ராசி, மகர லக்னம். 2020 ஏப்ரல் வரை ராகு தசை. இது முடிந்து அடுத்துவரும் குரு தசையில் அரசு வேலைக்கு வாய்ப்புண்டு. இருவரும் ஒருமுறை நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக பூஜை செய்யவும். தொழில் முன்னேற்றம், வாரிசு யோகம் எதிர்பார்க்கலாம்.
● ஆறுமுகம், எஸ்.வி. மில் போஸ்ட்.
எனக்கு எப்போது திருமணம் நடை பெறும்? அரசு வேலை கிடைக்குமா? அல்லது தனியார் துறையா? பெண் சொந்தமா? அந்நியமா?
மிதுன லக்னம், பூர நட்சத்திரம், சிம்ம ராசி. ராசியில் கேது, 7-ல் சூரியன், ராகு. லக்னத்திற்கு 7-ல் செவ்வாய்- சனி சேர்க்கை. அந்நிய சம்பந்தம். காலதாமதத் திருமணம். 2019 மார்ச்சில் 31 வயது முடியும். 2021 ஏப்ரல் வரை சந்திர தசை. இது முடியவேண்டும். அடுத்துவரும் செவ்வாய் தசையில் திருமணம் நடக்கும். முன்னதாக காதல் தோல்வி ஏற்படலாம். நீங்களும் சிவமாணிக்கத்தோடு நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக பூஜை செய்தால், நல்ல வேலை அமையும். அரசு வேலைக்கு இடமில்லை. தனியார் துறைதான்.
● எஸ். நந்திகேஸ்வரன், திருச்சி.
கடந்த 2013 பிப்ரவரி முதல் தொடர்ந்து உடல்நலக்குறைவு. மாறிமாறி பல தொந் தரவுகள். தொடர்ந்து வைத்திய சிகிச்சை. அதனால் வேலையையும் இழந்தேன். தொண்டையிலும் ஜூன் மாதம் அறுவைச் சிகிச்சை! எதிர்வீட்டுக்காரர்களாலும் பிரச்சினை. குடியிருக்கும் வீட்டிலும் சர்ப்பப் பிரவேசம். இவற்றிலிருந்து விடுபட நல்மார்க்கம் என்ன?
நந்திகேஸ்வரன் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னம். 2023 நவம்பர் வரை புதன் தசை. லக்னாதிபதி தசை, ராசியாதிபதி தசை. எம பயமில்லை. மனைவி சந்திரா உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னம். மகள் அனுராதாவுக்கு விசாக நட்சத்திரம், துலா ராசி, தனுசு லக்னம். மனைவிக்கு சுக்கிர தசை, தனது புக்தி 2022 பிப்ரவரி வரை. மகளுக்கு 2021 செப்டம்பர் வரை சனி தசை, தனது புக்தி. இருவர் ஜாதகப்படியும் உங்களுக்கு வருமான இழப்பும், வைத்தியச் செலவும் ஏற்படும். குடும்பத்துடன் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஆயுஷ் ஹோமம், தன்வந்திரி ஹோமம், சூலினி துர்க்கா ஹோமம், திருஷ்டி துர்க்கா ஹோமம், நவகிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவ ஹோமம் உட்பட 19 வகையான ஹோமங்கள் செய்து, கலச அபிஷேகம் செய்துகொள்ளவும். எந்த ஒரு பிரச்சினைக்கும் ஹோமம் செய்வது தான் நல்ல தீர்வு! புராண காலத்தில் ரிஷிகள் எல்லாரும் ஹோமம் (யாகம்) வளர்த்துதான் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொண் டார்கள். பஞ்சபூதத் தத்துவத்தில் நீரும் நெருப்பும்தான் வினைப்பயன்களைப் போக்க வல்லது. அக்னி காரியம் என்பார்கள். தீட்டு என்றால் தலையில் தண்ணீர் தெளிக்கலாம். ஆகாதுபோகாதவற்றைத் தீயிட்டுக் கொளுத்தி போகியில் சுத்தப்படுத்துகிறோம். யாகக் குண்டத்தில் மண் சம்பந்தப்படும். காற்றும் ஆகாயமும் மறைவாக இருந்து நடத்துகிறது. கலச நீரை அபிஷேகம் செய்கிறோம். முன் வினைப் பயன் தீரவும், முன்னோர்கள் சாப தோஷம் விலகவும், தெய்வகுற்றம் நீங்கவும் சங்கல்பம் செய்துகொள்ளவும்.
● ப. திரவியம், திருநெல்வேலி.
14-9-2018 தேதியிட்ட இதழில் ராசிபலன் பகுதியில் கும்ப ராசிப்பலனில் மகர ராசிக்கான கிரக அமைப்புப் பலனாக உள்ளது.
யானைக்கும் அடி சறுக்கும்! வருந்துகிறேன்.
● கௌரி, சென்னை.
சென்னையில் நிறைய ஜோதிடர் களைச் சந்தித்துவிட்டேன். எனக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. நீங்கள் தான் தீர்வு சொல்லவேண்டும். நான் சினி மாத்துறையில் டப்பிங் வாய்ஸ் ஆர்ட்டி ஸ்ட்டாக (பின்னணிக்குரல் கலைஞராக) 30 ஆண்டுகள் பணிபுரிகிறேன். 2013 முதல் சரியான வேலை வாய்ப்பில்லை. சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டா?
புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னம். சுக்கிர தசையில் ராகு புக்தி நடக்கிறது. 62 வயது நடக்கிறது. குரல்வளம் நன்றாக இருக்கிறதா? நடுக்கம் இல்லாமல் இருக்கிறதா என்று குரல் சோதனை செய்துபாருங்கள். அத்துடன் சேலம்- மேட்டூர் பாதையிலுள்ள நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். அத்துடன் வடக்குப் பார்த்த அம்மனுக்கு ஞாயிறு, வெள்ளி ராகு காலத்தில் இரண்டு நெய்தீபம் 18 வாரம் ஏற்றவும்.
● து. செல்வந்திரன், மேலக்கடையநல்லூர்.
குடும்பத்தில் மூன்றுபேருக்கு சனிபுக்தி. தொழில் முடக்கம், பணக்கஷ்டம். மிகவும் கஷ்டம்! என்ன பரிகாரம்?
19 சனிக்கிழமை கடையநல்லூர் ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சனேயருக்கு (வயல்வெளி ஆஞ்சனேயர்) நெய் விளக்கேற்றி அர்ச்சனை செய்து, 19-ஆவது வாரம் படிப்பாயச பூஜை செய்யவும். முன்னேற்றம் உண்டாகும்.